1991-ல் மத்திய அரசு நவீன தாராளமயக் கொள்கைகளை அமலாக்கத் துவங்கியது முதல், பொதுத்துறை கடும் தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது. 1999-ல் பொதுத்துறை பங்குவிற்பனை துறை ஏற்படுத்தப்பட்டது. இது வாஜ்பாயி பிரதமராக இருந்த காலத்தில் 2004 செப்டம்பரில் பங்கு விற்பனை அமைச்சகமாக மாறியது. பங்குகளின் உண்மை மதிப்பை விட குறைந்த விலைக்கு தனியாருக்கு பங்குகள் விற்கப்பட்டன. 2001-02 மற்றும் 2003-04 தேசிய ஜனநாயக அணிஆட்சிக்காலத்தில் அதிகபட்ச பங்குவிற்பனை நிகழ்ந்தது.2004-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 62 இடதுசாரி எம்பிக்கள் வெற்றிபெற்றனர். இடதுசாரிகள் கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக, பொதுத்துறை பங்குவிற்பனை துறை ஒழிக்கப்பட்டது. 2009வரை யு.பி.ஏ -1 ஆட்சிக் காலத்தில், இடதுசாரிகள் நிர்ப்பந்தத்தால் பொ
துத்துறை பங்குவிற்பனை எதுவும் நடைபெறவில்லை. 1998 முதல் 2004 வரை வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் ரூ.28284 கோடிக்கு பொதுத்துறை பங்கு விற்பனை நடந்தது. இதனோடு மோடி அரசின் கடந்த 4 1/2 ஆண்டு ஆட்சியிலும் மொத்த பொதுத்துறை பங்குவிற்பனையில் 68.67 சதவீதம் விற்பனை நடந்துள்ளது. நாட்டு மக்களின் தேசபக்த உணர்வுடன், உழைக்கும் மக்களின் உழைப்பில், மக்களின் வரிப்பணத்தில் உருவான, சுயசார்பு தொழில் வளர்ச்சியை உறுதிப்படுத்திய பொதுத்துறையின் சொத்துக்களை உள்நாட்டு, வெளிநாட்டு பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்த்திட பாஜக தலைமையிலான அரசு துடியாய்த் துடிக்கிறது. இது தேச விரோதக் குற்றம். சர்வதேச நிதி மூலதனம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் மேலாதிக்கத்திற்கு அடிபணிந்து மோடி அரசு, பொதுத்துறையை சீரழித்து வருகிறது. தனியார் நலன்களுக்காக மட்டுமே செயல்படுகிறோம் என்ற தெளிவான சமிக்ஞையை முதலாளிகளுக்கு மோடி அரசு கொடுத்துள்ளது.
தாங்கள் மிக அதிகமாக நேசிக்கும் பாஜக கட்சியின் தலைவர்களை, ஊழியர்களை , மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர் போர்டில் உறுப்பினர்களாக மோடி அரசு நியமித்துள்ளது. ஓஎன்ஜிசி, ஹெச்சிஎல், பிபிசிஎல், எஸ்டிசி உட்பட 11 பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர்களாக பாஜகவினர் பொறுப்பேற்றுள்ளனர். பொதுத்துறை தனியார்மய நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில், பல கேடுகெட்ட கொள்கைகளை மோடி அரசு பின்பற்றுகிறது. கேந்திரமான விற்பனை, அதாவது பொதுத்துறை நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது, பொதுத்துறை கம்பெனிகளை ஏலம் விடுவது, ஊழியர்களுக்கு பங்கு விற்பனை செய்வது,அரசின் பங்குகளை அதிகவிலை கொடுத்து பொதுத்துறை கம்பெனிகளே வாங்க நிர்ப்பந்திப்பது போன்ற பல வடிவங்களில் தனியார்மய நடவடிக்கைகளை மோடி அரசு முடுக்கி விட்டுள்ளது. 2016 - 17-ல் மட்டும் பல வடிவங்களில் எடுத்த நடவடிக்கைகள் மூலம் அரசுக்கு ரூ.46247 கோடி வரவு வந்துள்ளது. 2016-2017-ல் மட்டும் பொதுத்துறை கம்பெனி ஊழி
யர்களுக்கு விற்ற பங்குகள் மூலம் அரசு ரூ.529 கோடி நிதி திரட்டியது. சில மாதங்களிலேயே பங்கு மதிப்பு, விலை குறைந்து, ஊழியர்கள் தங்கள் உழைத்து ஈட்டிய சேமிப்பு நிதியை இழந்தனர். பங்கு சந்தை பரிவர்த்தனைவரி என்ற பெயரில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதுமோடி அரசு. மோடி ஆட்சிக் காலத்தில், அரசின் பங்குகளை அதிகவிலை கொடுத்து பொதுத்துறை கம்பெனிகளே வாங்க நிர்ப்பந்தித்ததின் மூலம் ரூ.31370 கோடியை அரசு கபளீகரம் செய்தது.
இந்த தொகை பொதுத்துறை கம்பெனிகள் வசமே இருந்திருந்தால், அவை நவீனமயமாக்கல், விரிவாக்கம் போன்ற ஆக்கப்பூர்வமான வகைகளில் பயன்பட்டிருக்கும். பொதுத்துறை கம்பெனிகளிடமிருந்து ஏராளமான நிதியை மோடி அரசு லாபப்பங்கீடாகவும் பெற்றுள்ளது. மோடி அரசின் கேடுகெட்ட கொள்கைகளால், நடவடிக்கைகளால், 2014-ல் ரூ.2.64 லட்சம் கோடியாக இருந்த பொதுத்துறை ரிசர்வ் நிதி, 2018-ல் ரூ.1.7லட்சம் கோடியாக குறைந்து விட்டது. இதனால் நடப்பு மூலதன பற்றாக்குறை ஏற்பட்டது. 2019பிப்ரவரியில் மோடி அரசு சமர்ப்பித்த இடைக்கால பட்ஜெட்டில் கூட ரூ.90000 கோடி பங்கு விற்பனை
க்கு இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட பொதுத்துறை மீதான தாக்குதல் தொடர்கிறது. தேர்தலில் வெற்றிபெற்று மோடிதிரும்ப ஆட்சிக்கு வந்தால் பொதுத்துறைக்கு இறுதி சாவுமணி அடிக்கப்பட்டு விடும். எனவே, பொதுத்துறை தொழிலாளர்களும், தொழிற்சங்க இயக்கமும் அனைத்து தேசபக்த சக்திகளையும் திரட்டி, பொதுத்துறையை பாதுகாத்திட, சுயச்சார்பு பொருளாதாரம் காத்திட, நாட்டின் இறையாண்மையை காத்திட பாஜகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் தேர்தலில் தோற்கடிப்போம்! விரிவான பிரச்சாரம் மூலம்
இடதுசாரிகள் வெற்றிக்கு, மதச்சார்பற்ற சக்திகள் வெற்றிக்கு பாடுபடுவோம்!
கட்டுரையாளர் : சிஐடியு அகில இந்திய செயலாளர், தமிழில் : ஆர்.சிங்காரவேலு